ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள குரங்காத்து பள்ளம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரது விவசாய தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. விவசாய தோட்டத்தின் அருகே குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. வயல்களில் இறையை தேடி மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்த பொதுமக்கள் ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமையில் சிறப்பு நிலையாளர் ராஜேந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.