செம்மரக்கட்டைகள் கடத்தல் - 25 தமிழர்கள் கைது

ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;

Update:2023-07-16 12:41 IST

திருப்பதி,

ஆந்திர மாநிலத்தில் உள்ள சேஷாசல காடுகளில் அதிக அளவில் செம்மரங்கள் வளர்கின்றன. இந்த செம்மரங்களை வெட்டி, அதன் கட்டைகளை சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். செம்மரக்கட்டை கடத்தலை தடுக்க அதிரடிப்படை சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 25 தமிழர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பிஞ்ச தும்மல் பைலுவில் 5 பேரும், பீலேர் வனப்பகுதியில் 20 பேரும் செம்மரக்கட்டை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 19 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மதிப்பு ரூ.30 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்