ஒரே ஆண்டில் 175 டன் ரேஷன் அரிசி கடத்தல்

விருதுநகர் மாவட்டத்தில் ஓராண்டில் 175 டன் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்றுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-21 19:28 GMT


விருதுநகர் மாவட்டத்தில் ஓராண்டில் 175 டன் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்றுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரேஷன் அரிசி

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் தொடரும் நிலையில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 175 டன் அளவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடைமுறையில் இதைவிட அதிக அளவிலேயே கடத்தல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஏழாயிரம் பண்ணையை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடத்தப்படுவது தொடர்கிறது. பலமுறை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அப்பகுதியில் கோவில்பட்டியை சேர்ந்தவர்களால் ரேஷன் அரிசி மூடைகள பதுக்கி வைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதை கண்டறிந்துள்ளனர்.

தொடர் கண்காணிப்பு

ஆனாலும் இந்த பதுக்கல் நடைமுறையை தவிர்க்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ளாதது ஏன்? என்று தெரியவில்லை.

மாவட்டத்தில் ரேஷன்அரிசி கடத்தலை தடுக்க வழங்கல் மற்றும் கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் இருந்த போதிலும் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் தினசரி அப்பகுதியில் ரோந்து வரும் நிலையிலும் நூற்றுக்கணக்கான ரேஷன் அரிசி மூடைகள் அலுவலர்களுக்கு தெரியாமல் அங்கு பதுக்கி வைக்க எவ்வாறு வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் தெரியவில்லை.

வலியுறுத்தல்

எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், மாவட்ட போலீஸ் நிர்வாகம், வழங்கல் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி அப்பகுதியை கண்காணிக்க ஒரு கூட்டுக்குழு அமைத்து அப்பகுதி ரேஷன் அரிசி பதுக்கல் மையமாக செயல்படுவதை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்