கள்ளச்சாராய மரணங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது - ஆர்.பி.உதயகுமார் பேட்டி

கள்ளச்சாராய மரணங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தார்;

Update: 2023-05-15 20:53 GMT


தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், மதுரையில் கூறியதாவது:- தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் விட்டது. போலீசார் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அவர்களது கைகள் கட்டப்பட்டு உள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில் தற்போது தினமும் கொலை, கொள்ளை அரங்கேறி கொண்டு இருக்கிறது. மணல் கொள்ளையை தட்டி கேட்ட கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என சொன்னார்கள். ஆனால் இன்று சாராய ஆறுதான் ஓடி கொண்டு இருக்கிறது. கள்ளச்சாராயத்தால் பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் என்கிற வார்த்தையே தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டு இருந்தது. இந்த கள்ளச்சாராயத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். கள்ளச்சாராய அதிகரிப்பால் வீட்டை விட்டு வெளியே செல்லும் உழைக்கும் தோழர்கள் உயிரோடு திரும்பி வருவார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்