கேரளாவுக்கு கடத்திய 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்திய 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
போடி முந்தல் சோதனை சாவடியில் பறக்கும் படை அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கேரள பதிவு எண் கொண்ட ஜீப்பை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 5 மூட்டைகளில் சுமார் 250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. பின்னர் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஜீப் மற்றும் டிரைவரை உத்தமபாளையம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.