குப்பைக்கிடங்கில் 3-வது நாளாக புகைமூட்டம்
ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் 3-வது நாளாக புகைமூட்டமாக இருந்தது.
நெல்லை சங்கரன்கோவில் ரோட்டில் ராமையன்பட்டியில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு அமைந்துள்ளது. இங்கு அவ்வப்போது தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் திடீரென்று இந்த குப்பைக்கிடங்கில் தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென்று பரவியது.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், நேற்று 3-வது நாளாக குப்பைமேட்டில் இருந்து புகை வெளியேறிக் கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியை மேற்கொண்டனர்.