ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.160-க்கு விற்பனை
ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.160-க்கு விற்பனை ஆனது.
ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.160-க்கு விற்பனை ஆனது.
விளைச்சல் குறைவு
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஈரோட்டை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் மட்டுமின்றி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்களும் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச்செல்கிறார்கள்.
ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கு காய்கறி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் காய்கறி விளைச்சல் குறைந்ததன் எதிரொலியாக அனைத்து காய்கறி விலையும் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக தக்காளி, பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றின் விலை சதத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.
சின்ன வெங்காயம்
இந்த நிலையில் கடந்த வாரம் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆனது. இதைத்தொடர்ந்து சதத்தை கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று வரை இந்த விலை தொடர்ந்தது. இதனால் கிலோ கணக்கில் சின்னவெங்காயத்தை வாங்கி வந்த பொதுமக்கள் தற்போது ¼ கிலோ ½ கிலோ என வாங்கிச்செல்கிறார்கள். கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய் உள்ளிட்ட சில காய்கறி விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை குறைந்துள்ளது.
ஈரோடு மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறி விலை கிலோவில் வருமாறு:-
பெரிய வெங்காயம் -ரூ.35, சின்ன வெங்காயம் -ரூ.160, தக்காளி -ரூ.100, கத்தரிக்காய் -ரூ.70, கேரட் -ரூ.65, பீன்ஸ் -ரூ.100, உருளை கிழங்கு -ரூ.30, பீட்ரூட் -ரூ.60 சவ்சவ் -ரூ.30, வெண்டைக்காய் -ரூ.40, பீர்க்கங்காய் -ரூ.60, முட்டைகோஸ் -ரூ.25 குடை மிளகாய் -ரூ.80, பச்சை மிளகாய் -ரூ.100, இஞ்சி -ரூ.300, புடலங்காய் -ரூ.40, பாகற்காய் -ரூ.60, கொத்தவரங்காய் -ரூ.40, முருங்கைக்காய் -ரூ.50, கோவக்காய் -ரூ.40, அவரைக்காய் -ரூ.60, கருணை கிழங்கு -ரூ.60, சேனைக்கிழங்கு -ரூ.60 சேம்புகிழங்கு -ரூ.70, பூசணிக்காய் -ரூ.30.