வனத்துறையினருக்கு திறன் மேம்படுத்தல் பயிற்சி
வனத்துறையினருக்கு திறன் மேம்படுத்தல் பயிற்சி;
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணலாயம் அமைந்துள்ளது. வேதாரண்யம் வனச்சரக அலுவலகத்தில் வனத்துறையினருக்கு திறன் மேம்படுத்தல் பயிற்சி திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ்குமார், நாகப்பட்டினம் வனஉயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா ஆகியோரின் அறிவுரைபடி நடந்தது.
பயிற்சிக்கு நாகை உதவி வனப்பாதுகாவலர் கிருபாகரன் தலைமை தாங்கினார். வனச்சரக அலுவலர் அயூப்கான் வரவேற்றார். இதில் நாகப்பட்டினம் வனஉயிரின கோட்ட வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.