சிவகங்கை: பாதாள சாக்கடை இணைப்பு பணியின் போது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் படுகாயம்

பாதாள சாக்கடை இணைப்பு பணியின் போது 2 தொழிலாளர்கள் மீது வீட்டின் பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.;

Update: 2022-11-29 10:53 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கல்பனா என்பவருக்கு சொந்தமான வீட்டில் பாதாள சாக்கடை இணைப்பு பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டின் பழைய சுற்றுச்சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் மீதும் விழுந்துள்ளது. அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்க முயன்றுள்ளனர்.

உடனடியாக இது குறித்து தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்களும் அங்கே விரைந்து வந்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் ஒரு தொழிலாளிக்கு லேசான காயங்களும், மற்றவருக்கு காலில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. இருவரது உடல்நலத்தையும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்