சின்னூர் தொடக்க பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது

சின்னூர் தொடக்க பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது

Update: 2022-12-05 19:50 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை ஒன்றியம், சின்னூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆலங்காயம் ஒன்றியம் நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மாதனூர் ஒன்றியம் மணியாரக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டது. சின்னூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியை நிர்மலா, வட்டாரக் கல்வி அலுவலர் ரமணன் மற்றும் பள்ளியின் ஆசிரியர் பழனி ஆகியோருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கினார்.

இப்பள்ளி விருது பெற்றமைக்காக கேத்தாண்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்