காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி, திருப்பத்தூர் பகுதிகளை இணைக்க வேண்டும் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூர் பகுதிகளை இணைக்க வேண்டும் என தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.;
சிங்கம்புணரி,
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூர் பகுதிகளை இணைக்க வேண்டும் என தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
சிங்கம்புணரி பஸ் நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தே.மு.தி.க. உயர்மட்ட குழு உறுப்பினர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருவேங்கடம், செயற்குழு உறுப்பினர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் குறிப்பாக காவேரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி, எஸ்புதூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளை இணைத்திடவும், காவிரி தண்ணீரை திறக்க வேண்டியும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாயை அனைத்து மகளிர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். என்.எல்.சி.யிடம் இருந்து விவசாயிகளின் நிலத்தை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அருணா கண்ணன், துணைச்செயலாளர் துரை பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் பைசூர் ரகுமான், சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் ராம்தாஸ், பேரூர் கழக செயலாளர் சிவக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் உமா சோணமுத்து, ஒன்றிய செயலாளர்கள்(எஸ்.புதூர்) குமரேசன், (சாக்கோட்டை) பாலமுருகன், (காளையார்கோவில் தெற்கு) தெட்சிணாமூர்த்தி, (காளையார்கோவில் வடக்கு) தமிழ்முருகன், (சிவகங்கை தெற்கு) மணிகண்டன், (கண்ணங்குடி) அழகு, (சிவகங்கை வடக்கு) முத்துசாமி, (இளையான்குடி) தர்மராஜ் ,(திருப்புவனம் மேற்கு) காந்தி, (திருப்புவனம் கிழக்கு) செட்டியம்பலம், (மானாமதுரை கிழக்கு) சீவராஜன், (மானாமதுரை மேற்கு) தர்மாராமு, நகர செயலாளர்கள்( சிவகங்கை) தர்மராஜ் சுப்புராமன், (மானாமதுரை) அழகு விஸ்வராசன், (தேவகோட்டை) தட்சிணாமூர்த்தி, (திருப்புவனம்) ஜெயின் அலாவுதீன், (இளையான்குடி)அப்துல் அஜீஸ், (திருப்பத்தூர்) மகாதேவன், எஸ்.வி. மங்கலம் வாஞ்சிநாதன், பிரான்மலை பழனிச்சாமி, வீரபத்திரன், பாலா, கண்ணன், சுரேஷ், பழனியப்பன், முருகேசன், சித்திரை செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் ராம்தாஸ் நன்றி கூறினார்.