கையெழுத்து இயக்கம்

போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Update: 2023-03-15 19:24 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கையெழுத்து இயக்கத்தை அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பாரத், மாவட்ட துணை தலைவர் செந்தமிழ் செல்வன். நகர செயலாளர் பிரபு, சாலைப்போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் திருமலை, முன்னாள் வாலிபர் சங்கமாவட்ட நிர்வாகி ஜெயக்குமார், மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்