சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு

மயிலாடுதுறை சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு;

Update: 2023-06-07 18:45 GMT


மயிலாடுதுறை தருமபுரம் சாலை கீழஉடையார் தெருவில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 21 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடந்தது. தொடர்ந்து கோவில் திருப்பணிகள் முடிந்த நிலையில், நேற்று குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கடந்த 4-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. பின்னர் நான்கு கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நேற்று காலை நிறைவடைந்து மகா பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோவிலை சுற்றி வந்து கோபுரத்தை வந்தடைந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்