மதுரை ஐகோர்ட்டில் சித்த மருத்துவ முகாம்

மதுரை ஐகோர்ட்டில் சித்த மருத்துவ முகாம் நடந்தது.;

Update: 2023-03-09 21:29 GMT


மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தில் சித்த மருத்துவ முகாம் நடந்தது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த இந்த முகாமை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மதுரை, தேனி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன், மதுரை ஐகோர்ட்டு கிளை சித்த மருத்துவ டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதா, யோகா தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறிய பிரச்சினைகளுக்கு உரிய மருந்து மாத்திரைகள் முகாமில் வழங்கப்பட்டது. தீவிர பிரச்சினைகள் இருப்பது தெரிந்தால் அதற்கான தொடர் சிகிச்சைக்கும் ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட டாக்டர்கள் வழங்கினர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐகோர்ட்டு வக்கீல்(மகா) சங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்