சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்

சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது;

Update: 2022-10-29 21:26 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் வரதராஜன் டெங்கு காய்ச்சலை தவிர்க்கும் முறைகள், கொசுப்புழு ஒழிப்பு, சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக பராமரிப்பதன் அவசியம், சித்த மருத்துவம் கூறும் வாழ்வியல் முறைகள் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கான சித்த யோக பயிற்சிகள் நடைபெற்றது. சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்