1.2 மில்லியன் இறால் மீன்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
1.2 மில்லியன் இறால் மீன்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முனைக்காடு கடல் பகுதியில் நேற்று மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி தமிழ்மணி தலைமையில் 1.2 மில்லியன் இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மூத்த விஞ்ஞானி ஜான்சன் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். கடலில் விடப்பட்டுள்ள இந்த இறால் குஞ்சுகள் இன்னும் 5 மாதங்களில் நன்கு வளர்ச்சி அடைந்த பின்னர் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து விசைப்படகு மற்றும் நாட்டு பகுதிகளில் மீன் பிடிக்க சென்று வரும் மீனவர்களுக்கு கணிசமான மீன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.