கோவில் யானை 'கோமதி'க்கு குளிக்க ஷவர் வசதி

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் யானை ‘கோமதி’க்கு குளிக்க ஷவர் வசதி செய்து கொடுக்கப்படடு உள்ளது.

Update: 2022-12-12 18:45 GMT

சங்கரன்கோவில்:

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் யானை 'கோமதி'க்கு ஷவர் வசதியுடன் குளியலறை மற்றும் ராட்சத மின்விசிறி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனை ராஜா எம்.எல்.ஏ. கோவிலுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமா மகேஸ்வரி, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞரணி சரவணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்