போலீசார் சார்பில் இளைஞர்களுக்கு குறும்பட போட்டி

போலீசார் சார்பில் இளைஞர்களுக்கு குறும்பட போட்டிக்கு வருகிற 13-ந் தேதிக்குள் குறும்படங்களை அனுப்பலாம்.;

Update:2023-03-04 16:59 IST

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் தனி திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் குறும்பட போட்டி நடத்தப்படவுள்ளது. இந்த போட்டியானது பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு சாலை பாதுகாப்பு, காவல் உதவி செயலி, இணையதள குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் குறும்படங்கள் அனைத்தும் சுய படைப்புகளாக இருக்க வேண்டும். குறும்படம் 3 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தாங்கள் தயாரித்துள்ள விழிப்புணர்வு குறும்படத்தினை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக ஊடகவியல் பிரிவில் நேரிலோ அல்லது plrsmc2019@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ வருகிற 13-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் மின்னஞ்சலில் அனுப்பும் நண்பர்கள் தங்களது பெயர் மற்றும் முகவரியை 9498100690 என்ற செல்போனின் வாட்ஸ்-அப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் போலீஸ் சூப்பிரண்டால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் சிறந்த முதல் 3 குறும்பட தயாரிப்பாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். மேலும் தாங்கள் எடுக்கும் குறும்படம் போலீசாரின் சார்பில் சமூக வலைதள பக்கங்களில் பதிவிடப்படும். பொதுமக்களின் நலனுக்காக சேவை நோக்கில் மட்டுமே தயாரிக்கப்படும் தங்களது குறும்படத்தினை மாவட்ட போலீசாரிடம் சமர்பித்த பின்பு தாங்களால் காப்புரிமை கேட்க இயலாது. இந்த குறும்பட போட்டியில் கல்லூரி மாணவ-மாணவிகள், பணியில் உள்ளவர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட போலீசாரின் சமூக ஊடகவியல் பிரிவை 9498100067, 8760893036 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்