மரம் சாய்ந்து கடைகள் சேதம்

சாலை அமைக்கும் பணியின்போது மரம் சாய்ந்து விழுந்து கடைகள் சேதம் அடைந்தன.

Update: 2023-05-27 16:17 GMT

வத்தலக்குண்டு அருகே நால்ரோடு சந்திப்பில் இருந்து சின்னுபட்டி வரை சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் இருந்த மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று நடந்தது. அப்போது பழமையான புளியமரம் ஒன்றை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும்போது அது வேரோடு சாய்ந்து அங்கிருந்த கடைகள் மீது விழுந்தது. மேலும் மின் கம்பங்களும் விழுந்தன. இதில் ஒரு கடை சேதமடைந்ததுடன் அங்கிருந்த முருகன் என்பவர் படுகாயமடைந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை அமைக்கும் தனியார் ஒப்பந்த பணியாளர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பஸ் மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்