மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தை முறைகேடாக விற்பனை செய்த கடைக்கு 'சீல்'

ஊட்டியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தை முறைகேடாக விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.;

Update:2023-09-27 02:00 IST

ஊட்டி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்க விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக பொதுமக்கள் மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் தாசில்தார் அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வரும் இந்த விண்ணப்பத்தை கலர் ஜெராக்ஸ் எடுத்து சட்ட விரோதமாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் ரூ.30 முதல் 50 வரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது, வருவாய் துறைக்கு தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உத்தரவின் பேரில், தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் தமிழ்வாணன், கிராம நிர்வாக அலுவலர் இளங்கோகில குரு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கடைக்கு சீல் வைத்தனர். இதே போல் சட்ட விரோதமாக மகளிர் உரிமை தொகையை விண்ணப்பத்தை கடைகளில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

----

Reporter : R.Thangapandi_Staff Reporter Location : Coimbatore - Coimbatore

Tags:    

மேலும் செய்திகள்