போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

தர்மபுரியில் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்தது.;

Update: 2022-08-25 19:15 GMT

தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு போலீஸ் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற 220 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு அடிப்படை பயிற்சிகள், உடற்பயிற்சிகள், கவாத்து பயிற்சி, ஆயுதபயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி, சட்ட பயிற்சி உள்பட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி அருகே ஒடசல்பட்டி மூக்கனூர் வனப்பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைசெல்வன் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்- இன்ஸ்பெக்டர் சின்னசாமி ஆகியோர் அளித்தனர். 6 வகையான துப்பாக்கிகளை பயன்படுத்தும் முறைகள், அவற்றை பயன்படுத்தி சுடும் முறைகள் குறித்து அப்போது பயிற்சி அளிக்கப்பட்டது. 4 நாட்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்