திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே சிவனடியார்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே சிவனடியார்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
இந்து கடவுள்களை அவதூறாக பேசியதாக தர்மபுரி எம்.பி.செந்தில்குமாரை கண்டித்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் இந்துக்கள் வழிபடக்கூடிய தெய்வங்களை பற்றி செந்தில்குமார் எம்.பி. சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இது குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், இந்திய மக்களின் ஒற்றுமை மற்றும் சமுதாய அமைதியை கெடுக்கும் வகையிலும் உள்ளது. ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பி வேதமந்திரங்களை ஓதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.