வீட்டில் மறைத்து வைத்த செம்மரக்கட்டைகள்
ராணிப்பேட்டையில் வீட்டில் மறைத்து வைத்த செம்மரக்கட்டைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.;
ராணிப்பேட்டை பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் ரமணன் என்பவருடைய வீடு உள்ளது. இவருடைய வீட்டுக்கு அருகில் ஏரி உள்ளது. இந்த நிலையில் ஏரி வழியாக வந்த யாரோ சிலர் ரமணனின் வீட்டு மாடி படிக்கட்டுக்கு கீழே, சுமார் 160 கிலோ எடையுள்ள 7 செம்மரக்கட்டைகளை மறைத்து வைத்திருந்தனர்.
இதை தற்செயலாக பார்த்த ரமணன் ராணிப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து ராணிப்பேட்டை போலீசார் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, செம்மரக்கட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.