சோலைமலை முருகன் கோவிலில் சஷ்டி பூஜை

சோலைமலை முருகன் கோவிலில் சஷ்டி பூஜை

Update: 2023-09-21 21:27 GMT

அழகர்கோவில்

மதுரை மாவட்டம் அழகர்மலை உச்சியில் அமைய பெற்றிருப்பது பிரசித்தி பெற்ற ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலாகும். இக்கோவிலில் நேற்று அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் வளர்பிறை சஷ்டி பூஜைகள் நடந்தது. இதையொட்டி உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு அங்குள்ள கோவில் வெளி பிரகாரத்தின் வழியாக வந்து இருப்பிடம் சேர்ந்தது. முன்னதாக மூலவர் சுவாமிக்கும், வித்தகவிநாயகர் மற்றும் வேல்சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்