சாரதா சித்திவிநாயகர் கோவில் குடமுழுக்கு
மெலட்டூர் சாரதா சித்திவிநாயகர் கோவில் குடமுழுக்கு
மெலட்டூர்:
மெலட்டூர் சாரதா சித்திவிநாயகர், சபரி சாஸ்தா கோவில்களின் குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கையொட்டி 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சாரதா சித்தி விநாயகர், சபரி சாஸ்தா கோவில்களின் மூலவர் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.