புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சங்கர் ஜிவால் முதல் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார் .;

Update: 2023-06-30 10:36 GMT

சென்னை,

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி வந்தார். அவர் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார். சங்கர் ஜிவாலிடம் முழு பொறுப்பையும் சைலேந்திரபாபு ஒப்படைத்தார்

இந்த நிலையில் புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுள்ள சங்கர் ஜிவால் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்