நெல்லையில் சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு

நெல்லையில் சிவன் கோவில்களில் சனி பிரதோ‌ஷ வழிபாடு நடந்தது.;

Update: 2023-07-01 22:49 GMT

நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தையொட்டி கைலாசநாதருக்கும், நத்திக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று சனி பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கும், நத்திக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை கருப்பந்துறை அழியாபதி ஈசுவரர் கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில், அருகன்குளம் ராமலிங்கசுவாமி கோவில், மேலகுலவணிகர்புரம் தான்தோன்றியப்பர் கோவில், கொக்கிரகுளம் சிவன் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சனி பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்