பேடரஅள்ளியில்சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா

Update: 2023-07-26 18:45 GMT

தர்மபுரி அருகே பேடரஅள்ளி கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி சக்தி கரகம் அழைத்தலும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழாவும், சிறப்பு பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று கங்கை பூஜை மற்றும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவைலயொட்டி ஏராளமான பக்தர்கள் அழகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலமும், தீமிதி விழாவும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்