சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-07-16 18:16 GMT

ஆலங்குடி அருகே அய்யனார்புரத்தில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதைதொடர்ந்து 2 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையில் புனித நீரை கலசங்களில் நிரப்பி வைத்து பூஜை நடைபெற்றது. இதையடுத்து கலசங்களை சிவாச்சாரியார்கள் மேள தாளம் முழங்க தலையில் சுமந்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் சக்தி விநாயகர் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட துணை செயலாளர் ஞான.இளங்கோவன், அ.தி.மு.க.வை சேர்ந்த தொழிலதிபர் பழனிவேல் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்