சக்தி கல்லூரி ஆண்டு விழா
ஒட்டன்சத்திரத்தில் சக்தி கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது.;
ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 13-வது ஆண்டு விழா நடந்தது. இதற்கு சக்தி கல்வி குழுமத்தின் தாளாளர் வேம்பனன் தலைமை தாங்கினார். துணைத் தாளாளர் கோகிலா முன்னிலை வகித்தார். கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவர் மற்றும் உதவி பேராசிரியர் எஸ்.கவிதா வரவேற்றார். தமிழ் துறை தலைவர் முருகேஸ்வரி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல்துறை அதிகாரி பாரி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பல்வேறு பரிசுகளும் பட்டயங்களும் வழங்கி மாணவிகள் தங்கள் எதிர்கால வாழ்வில் எப்படி தைரியத்துடன் செயல்பட வேண்டுமென்று பல்வேறு கருத்துக்களை கூறி சிறப்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் தேன்மொழி ஆண்டு அறிக்கை வாசித்தார். இந்த விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரியின் ஆலோசகர்கள் சிவக்குமார், இளங்கோ, குப்புசாமி, சதாசிவம் ஆகியோர் விழாவினை சிறப்பித்தனர். விழாவில் அனைத்து துறை பேராசிரியர்களும் மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழா முடிவில் வேதியல் துறை தலைவர் பஞ்சவர்ணம் நன்றி கூறினார்.