சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தேவதானப்பட்டியை சேர்ந்தவர் நவீன் (வயது 20). இவர் 16 வயது சிறுமியிடம் பழகி வந்தார். இதனை சிறுமியின் பெற்றோர் கண்டித்தனர். இந்நிலையில் கடந்த 20-ந்தேதி சிறுமியை காணவில்லை. எனவே பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை தேடினர். இந்தநிலையில் 21-ந்தேதி மதியம் சிறுமி திரும்ப வீட்டுக்கு வந்தார்.
அவரிடம் விசாரித்தபோது, திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி நவீன் கொடைக்கானலுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீனை கைது செய்தனர்.