சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் தொல்லை; தாய்மாமா-தாத்தா கைது

சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் தொல்லை அளித்ததாக தாத்தா, தாய்மாமா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-08-13 19:38 GMT

சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் தொல்லை அளித்ததாக தாத்தா, தாய்மாமா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியின் அலறல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இ்ந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடைேய ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த சிறுமியை தந்தை கைவிட்டு சென்றுவிட்டார். அடுத்த சில நாட்களில் தாயும் எங்கேயோ சென்றுவிட்டார். எனவே தாய்மாமா சரவணன் (வயது48) வீட்டில் அந்த சிறுமி இருந்தாள்.

இந்த சிறுமி தினமும் அலறி துடிக்கும் சத்தம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கேட்டுள்ளது. மேலும் அவளிடம் அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது, தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளாள். அவளது உடலில் ஆங்காங்கே சூடு வைத்ததற்கான காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விருதுநகர் சைல்ட் லைன் அமைப்பிற்கு போனில் தகவல் அளித்தனர். அதன்பேரில் குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் பொருட்செல்வி சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அந்த சிறுமியின் உடலில் இடுப்புக்கு கீழே பல இடங்களில் தீக்காயம் இருந்துள்ளது. பின்னர் இதுகுறித்து குழந்தைகள் நல பணியாளர் ஞானம், அருப்புக்கோட்டை மகளிர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

பாலியல் தொல்லை

மேலும் அதிகாரிகளும், போலீசாரும் வந்து அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 6 மாதங்களாக அந்த சிறுமியின் மாமா சரவணன், தாத்தா பெரியண்ணன் (72) ஆகிய 2 பேரும் சேர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், சூடு வைத்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. தினமும் அவர்கள் சித்ரவதை செய்துள்ளனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமிக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய தாத்தாவும், மாமாவும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அந்த சிறுமியை அதிகாரிகள் மீட்டு விருதுநகர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்