சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது

விருத்தாசலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-06-28 19:01 GMT

விருத்தாசலம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி பகுதியைச் சேர்ந்த மாயவன் மகன் தனுஷ் என்ற சரத்பாபு (வயது 19). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்பாபுவை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்