சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 6 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2023-09-22 20:43 GMT

நெல்லை மாவட்டம் முக்கூடல் மயிலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பனித்துரை (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முக்கூடல் போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி அன்புசெல்வி விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட பனித்துரைக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் உஷா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்