2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
வலங்கைமான் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை உள்பட 3 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.;
வலங்கைமான்:
வலங்கைமான் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை உள்பட 3 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
குடும்ப பிரச்சினை
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 47 வயதான ஒருவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி அவரிடம் இருந்து பிரிந்து சென்று விட்டார்.
இதனால் 13 வயது மாற்றுத்திறனாளி மகள் மற்றும் 7 வயது மகளை தந்தை வளர்த்து வந்தார். மற்ற ஒரு மகன் மற்றும் மகள் தாய் வழி தாத்தா, பாட்டியிடம் வளர்ந்து வந்தனர்.
பாலியல் தொல்லை
இந்த நிலையில் 13 வயது மாற்றுத்திறனாளி மகளுக்கும், 7 வயது மகளுக்கும் தந்தை மற்றும் சிறுமிகளின் அத்தை கணவர், எதிர்வீட்டு முதியவர் ஆகியோர் கடந்த ஒரு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரித்துவாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 சிறுமிகளை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
3 பேர் போக்சோவில் கைது
இதுகுறித்த புகாரின் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.