10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.;

Update: 2023-08-30 20:21 GMT

தம்மம்பட்டி அருகே தகரபுதூர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 47). கூலித்தொழிலாளி. இவர், 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி அதேபகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு சாப்பாடு் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் சார்லஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சார்லசுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்