மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் வாலிபர் கைது

மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் வாலிபர் கைது;

Update: 2022-07-08 14:30 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவில் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 26). இவர் 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது மாணவியை குடோனுக்கு அழைத்து சென்று, தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சதீசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்