சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 29). தனது தந்தை கணேசனின் வெல்டிங் கடையில் ஜெகதீஷ் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெகதீஷ் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஷை கைது செய்தனர்.