பயனாளிகளுக்கு தையல் எந்திரம்

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.;

Update: 2023-01-09 18:07 GMT

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில், நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு ்ளித்தனர். மொத்தம் 244 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

தையல் எந்திரம்

தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பேருக்கு தலா ரூ.5,475 மதிப்பிலான இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும், இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட நெமிலி பஜனை கோவில் தெருவை சேர்ந்த பிச்சுமணி என்பவர் மூன்று சக்கர சைக்கிள் கேட்டு மனு அளித்தார். உடனியாக அவருக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான ஊன்றுகோலையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், துணை கலெக்டர் தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபானைமையினர் நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையாளர் சத்தியபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, இணை இயக்குநர் (குடும்ப நலம்) மணிமேகலை, துணை இயக்குநர் (பொது சுகாதாரப் பணிகள்) மணிமாறன், குடும்ப நல அறுவை சிகிச்சை நிபுணர் கீர்த்தி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்