ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம்; எம்.எல்.ஏ. வழங்கினார்
அம்பையில் ஏழை பெண்களுக்கு தையல் எந்திரத்தை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.;
அம்பை:
அம்பை மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்த மாரியம்மாள், பத்தமடையைச் சேர்ந்த 3 ஏழை பெண்களுக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் இருந்து இலவச தையல் எந்திரங்களை வழங்கினார்.
இதில் சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், அம்பை நகர செயலாளர் அறிவழகன், மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன்பாபு, அம்பை நகராட்சி முன்னாள் துணை தலைவர் மாரிமுத்து மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.