சாலையில் தேங்கும் கழிவுநீர்

கடமலைக்குண்டு அருகே கிராமத்தில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது;

Update: 2023-06-25 18:45 GMT

கடமலைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள தெருக்களில் கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கொண்டு செல்ல கால்வாய் முழுமையாக கட்டப்படவில்லை. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த சாலையில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கிராமத்தில் சாலையில் தேங்கும் கழிவுநீர் தேங்காமல் இருக்கும் வகையில் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்