மக்கள் நீதிமன்றத்தில் 15 வழக்குகளில் ரூ.65 லட்சத்துக்கு தீர்வு

அரக்கோணத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 15 வழக்குகளில் ரூ.65 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டது.;

Update: 2022-08-13 17:20 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிளான மக்கள் நீதிமன்றம் அரக்கோணம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.அருந்ததி தலைமையில் நடந்தது. மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.ஷாக்கிரா பானு மற்றும் வழக்கறிஞர் என்.குமரகுரு முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 15 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.65 லட்சத்து 40 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது.

குற்றவியல் வழக்குகளில் 184 வழக்குகள் முடிக்கப்பட்டு அபராத தொகையாக ரூ.1,38,700 வசூல் செய்யப்பட்டது. மேலும் பல ஆண்டு காலமாக பிரித்து வாழ்ந்த இரண்டு தம்பதிகள் சமரசத்தின் மூலம் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். தனசேகரன், அனில் குமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், பொது மக்கள் கலந்து கொண்டடனர்.

Tags:    

மேலும் செய்திகள்