விவசாயி வீட்டுக்கு தீ வைப்பு; தந்தை-மகன் கைது

வந்தவாசி அருகே விவசாயி வீட்டுக்கு தீ வைத்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-03-12 22:51 IST

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அதியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மு.துரை (வயது 50), விவசாயி. அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் நாகலிங்கம் (55). இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நாகலிங்கம், அவரது மகன் அன்பரசு (21) ஆகியோர் சேர்ந்து துரையின் கூரை வீட்டை தீ வைத்து எரித்ததாக தெரிகிறது.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் கூரை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகலிங்கம், அவரது மகன் அன்பரசு ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்