மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்

Update: 2023-06-05 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை அருகே உள்ள தூணுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வயிறு (வயது 65), பெருமாள் (70). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சின்ன கீரமங்கலத்தில் இருந்து தூணுகுடிக்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது பெருஞ்சூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது சென்னையை சேர்ந்த கோபிநாதன் (43) என்பவா் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிா்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்