செங்கமல நாச்சியார்புரம் பஜாரில் தொடர் விபத்துகள்

4 முக்கிய சாலைகள் சந்திக்கும் செங்கமல நாச்சியார்புரம் பஜாரில் விபத்துகள் தொடருவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2023-04-17 01:13 IST

சிவகாசி

4 முக்கிய சாலைகள் சந்திக்கும் செங்கமல நாச்சியார்புரம் பஜாரில் விபத்துகள் தொடருவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான சாலை

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதி செங்கமலநாச்சியார்புரம். சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், எம்.புதுப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து வரும் சந்திப்பு ரோடுகள் செங்கமல நாச்சியார்புரம் சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் செங்கமலநாச்சியார்புரம் பஜார் பகுதியை கடந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. அதிலும் குறிப்பாக லாரிகள் அதிக அளவில் சென்று வருகின்றன. இதனால் இந்த பகுதியில் வாகன எண்ணிக்கை வழக்கத்தை விட அதிக அளவு இருக்கும்.

தொடர் விபத்து

மிகவும் குறுகலான இந்த பகுதியை கடந்து செல்வதில் சரக்கு வாகனங்கள் சிரமப்படும் நிலையில் மற்ற திசைகளில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக வந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் தினமும் ஒரு விபத்து கட்டாயம் ஏற்படும் நிலை தொடர்கிறது. இதனை தடுக்க இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் தொடரும் விபத்துக்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அந்த பகுதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வேகத்தடை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஜார் பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்