ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்து போட்டி: வேட்பாளரை அறிவித்து அதிரடிகாட்டிய தேமுதிக...!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-23 09:28 GMT

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பாக மீண்டும் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து இடைத்தேர்தலின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார்.

இதுபோன்று அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்றது.

இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்