செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: முதன்மை அமர்வு கோர்ட் விசாரிக்கலாம்: சென்னை ஐகோர்ட்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு கோர்ட் விசாரிக்கலாம் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது;

Update: 2023-09-04 06:22 GMT

சென்னை,

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மனுவை எந்த கோர்ட் விசாரிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டை நாடி தெளிவு பெறுமாறு சிறப்பு கோர்ட் அறிவுறுத்தியது.

இதையடுத்து, ஜாமீன் மனுவை எந்த கோர்ட் விசாரிக்க அதிகாரம் உள்ளது என்பது பற்றி முடிவு செய்ய செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதே தவறு எனக் கூறிய நீதிபதிகள் அனைத்து கோப்புகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்