நகரும் படிக்கட்டில் தவறி விழுந்த மூதாட்டியால் பரபரப்பு

நகரும் படிக்கட்டில் தவறி விழுந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-09-25 03:16 IST

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 2-வது மற்றும் 3-வது நடைமேடைக்கு பயணிகள் செல்வதற்காக எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய ரெயில்கள் இந்த நடைமேடைகளில் வருவதால் வயதானவர்கள், சிறுகுழந்தைகளை அழைத்து வருபவர்கள் இலகுவாக நடைமேடைக்கு செல்ல இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூதாட்டி ஒருவர் நகரும் படிக்கட்டில் சென்றபோது, பயத்தில் பக்கவாட்டில் உள்ள கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் படி நகர்ந்தபோது அவர் மேலே செல்ல முடியாமல், பின்னோக்கி விழுந்தார். அப்போது, அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், எஸ்கலேட்டரை நிறுத்தி மூதாட்டியை காப்பாற்றினார். பின்னர், அவரை பத்திரமாக நடைமேடைக்கு அழைத்துச்சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்