மூத்த குடிமக்கள் அவை ஆண்டு விழா
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை ஆண்டு விழா நடந்தது.
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவையில் 36-ம் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு அதன் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். தனியார் பள்ளி முதல்வர் சரவணன் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் திருவள்ளுவன் வரவேற்றார். புலவர் தியாகராஜன் ஆண்டறிக்கை படித்தார். துணைச் செயலாளர் முருகையன் ஆண்டு வரவு செலவு கணக்குகளை படித்தார். விழாவில் 80 வயது நிரம்பிய துணை செயலாளர் கிருஷ்ணசாமி, அவை உறுப்பினர் ஆல்பர்ட், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோரை பாராட்டி மூத்த வழக்கறிஞர் சிவபுண்ணியம் பேசினார். தொடர்ந்து 'இன்பமே எந்நாளும் துன்பமில்லை' என்னும் தலைப்பில் பேரவையின் செயலாளர் செல்வகுமார் பேசினார். முடிவில் பேரவை துணைச் செயலாளர் முருகையன் நன்றி கூறினார்.