எலும்பு முறிவு அறுவை சிகிச்சையில் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி புதிய சாதனை

எலும்பு முறிவு அறுவை சிகிச்சையில் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி புதிய சாதனை படைத்தது.

Update: 2023-02-27 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்ைட அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக சிசேரியன் அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை என பல்வேறு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. தலைமை மருத்துவராக செயல்பட்டு வரும் டாக்டர் ராஜேஷ் கண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் இங்குள்ள மருத்துவர்களும், பணியாளர்களும் நோயாளிகளுக்கு இன் முகத்துடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். அகில இந்திய அளவில் சிறந்த அரசு தாலுகா மருத்துவமனைக்கான மத்திய அரசின் காயகல்ப விருது கடந்த ஆண்டு இந்த ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது.

இந்தநிலையில் தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் நல இயக்குனர் டாக்டர் பிரேமலதா வழிகாட்டுதலின்படி செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணா ஆலோசனையின்படி இங்கு நேற்று முன்தினம் முதல் முறையாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபருக்கு இடது கை மணிக்கட்டில் ஏற்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிளேட் வைத்து பொருத்தப்பட்டு குணமாக்கப்பட்டது. எலும்பு முறிவு மருத்துவர் ரவிச்சந்திரன், மயக்கவியல் மருத்துவர் சுபா, செவிலியர்கள் அறம் வளர்த்தாள், முத்துலட்சுமி ஆகியோரை கொண்ட குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இதைத் தொடர்ந்து நோயாளியின் உறவினர்கள், நண்பர்கள் மருத்துவ குழுவினருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்